முதற்பாகம்
இலகுகலி மாவோதி
மணித்துகில்செங்
கரத்திருத்தி வேத மீந்து
பலரறிய
நபியெனும்பேர் பரித்தாண்டு
மிருநான்கும் படரு நாளில்.
29
(இ-ள்) எல்லா வுலகங்களும் அடங்கும்
வண்ணம் ஒப்பற்ற அரசு செலுத்தும் பெரியவ னான ஜல்ல
ஜலாலகு வத்த ஆலாவின் கிருபையினால் கணக்கற்ற
பிரகாசத்தைக் கொண்ட சிறகுகளையுடைய ஜிபுரீல்
அலைகிஸ்ஸலா மவர்கள் உயர்ந்த வான லோகத்தை விட்டும்
நீந்தி அஹ்ம தென்னும் திருநாமத்தை யுடைய நாயகம்
நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் தங்கிய மலையை நெருங்கி அன்பாய் ஒளிரா
நிற்கும் லாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹி
யென்னும் கலிமா வாகிய வேதவசனத்தைக் கூறிச் சிறந்த
வஸ்திரத்தை நாயக மவர்களின் செந்நிற மமைந்த
கைகளிலிருக்கச் செய்து புறுக்கானுல் அலீமென்னும்
வேதத்தைக் கொடுத்துப் பல ஜனங்களும் அறியும் வண்ணம்
நபியென்னும் அபிதானத்தைத் தரிப்பித்து எட்டு
வருடங்களும் சென்ற காலத்தில்.
2170. இறூமிகட்கும் பாரிசுநாட்
டவர்க்கும்பெரும்
பகையாக விருந்தவ் வாண்டு
மறமுதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டா
ரெனும்வசன மக்க மீதி
லுறையும்பெருங் குபிரவர்கேட் டுடற்பூரித்
திசுலாமி லுற்ற பேரைத்
திறனடுத்த தெமர்க்கிழிந்த சிதைவடுத்த
துமர்க்கெனவுஞ் செப்பி னாரால்.
30
(இ-ள்) றூமிகட்கும் பாரிசு நாட்டை
யுடையவர்களுக்கும் பெரிய பகைமையாக இருந்து
அவ்வருடத்தில் கொடுமை முதிர்ந்த பாரிசு நாட்டை
யுடையவர்கள் விஜயத்தைக் கொண்டார்களென்னும்
வார்த்தைகளைத் திருமக்கமா நகரத்தின்கண்
தங்கியிருக்கும் பெரிய காபிர்கள் கேள்வியுற்றுத்
தங்களின் சரீரமானது பருக்கப் பெற்றுத் தீனுல் இஸ்லா
மென்னும் மார்க்கத்தி லடைந்த ஜனங்களை எம்மவர்களுக்கு
மேன்மையான வெற்றி வந்தடுத்தது. உம்மவர்களுக்குத்
தாழ்மையாகிய சிதைவானது வந்தடுத்தது என்றுங்
கூறினார்கள்.
2171. தருவைநிகர் முகம்மதுநன்
னபியுரைத்தா
ருறூமிகடஞ் சமர்க்காற் றாது
வெருவியிரு நிலத்தோடிப் பாரிசற
முறியுமென விரித்த வாய்மை
|