|
முதற்பாகம்
யொருபொழுதும் பழுதாகா தென்னஅபூ
பக்கரெடுத் துரைப்பக் கேட்டே
யிருமையினும் பலனறியா னிபுனுகல
பெனுமவன்வந் தெதிர்ந்து சொல்வான்.
31
(இ-ள்) அவ்வாறு கூறக் கற்பகச்
சோலையை நிகர்த்த நல்ல நபியாகிய நாயகம் முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பெரிய
இந்தப் பூமியினிடத்தில் உறூமிகளினது யுத்தத்திற்குப்
பாரிசு நாட்டை யுடையவர்களின் சேனையானது ஆற்றாமற்
பயந்து ஓடி முழுவதும் தோற்றுப் போகுமென்று கூறினார்கள்.
அப்படி விரித்துக் கூறிய வசனங்கள் ஒரு காலத்தும்
தப்பாகா தென்று அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு
அவர்கள் எடுத்துச் சொல்ல இம்மை, மறுமை யென்னும்
இரண்டிலும் பயனறியாதவனான இபுனுகல பென்று கூறுபவன் தனது
காதுகளினாற் கேள்வியுற்று வந்து எதிர்த்துக் கூறுவான்.
2172. எங்கள்குலத்
தவருரையே பழுதாகிப்
பாரிசவ ரிரிந்தா ரென்னி
லுங்கடமக் கருள்வேனூ றொட்டகையீ
தொட்டமென வுரைப்ப நோக்கி
யெங்கணபி முன்னுரைத்த வுரைதவறி
யுறூமிகள்போ ரிடைந்தா ரென்னி
லுங்கடமக் களித்தலஃ தென்னஅபூ
பக்கரெடுத் தோதினா ரால்.
32
(இ-ள்) எங்கள் கூட்டத்தார்களின்
வார்த்தைகள் தப்பாய்ப் பாரிசு நாட்டை யுடையவர்கள்
தோற்று ஓடினார்களென்று கூறினால் நான் உங்களுக்கு நூறு
ஒட்டகங்கள் தருவேன் இஃது பந்தய மென்று சொல்ல
அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் பார்த்து
எங்களது நபி யாகிய நபிகட் பெருமானார் நாயகம் முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
ஆதியிற் கூறிய வார்த்தைகளானவை தவறுதலுற்று உறூமிகள்
யுத்தத்தில் தோற்று ஓடினார்களென்று கூறினால் யான்
உங்களுக்குத் தருவது அந்த நூறு ஒட்டகங்களென்று எடுத்துச்
சொன்னார்கள்.
2173. இருவருஞ்சம் மதித்திகலி
யொட்டியவொட்
டகத்தினொடு மிருக்கு நாளி
லொரு கவிகை நிலவவுறூ மிகளடர்ந்து
பாரிசவ ருடைந்தா ரென்னப்
பெருகுமொழி யவரவர்கேட் டிபுனுகல
புடனுரைப்பப் பெரிதி னீந்தா
னருவரைநே ரொட்டகநூ றடலரியே
றென்னுமபூ பக்கர்க் கன்றே.
33
|