பக்கம் எண் :

சீறாப்புராணம்

806


முதற்பாகம்
 

      (இ-ள்) இரண்டு பேர்களும் அவ்வாறு விரோதித்துச் சம்மதங் கொண்டு பொருந்திய ஒட்டகத்துடன் இருக்கின்ற நாளில், ஒப்பற்ற சந்திர வட்டக் குடையானது பிரகாசிக்கும் வண்ணம் உறூமிகள் அடர்த லுற்றுப் பாரிசு நாட்டை யுடையவர்கள் தோற்றா ரென்று பெரிய வார்த்தைகளை அவரவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று இபுனுகல பென்பவனோடு கூற, அவன் அரிய மலைகளைப் போலும் நூறு ஒட்டகங்களைப் பெருமையுடன் வலிமையைக் கொண்ட சிங்க மென்று கூறா நிற்கும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களுக்குக் கொடுத்தான்.

 

2174. ஒட்டியொட்டம் பலித்தவொட்டைத் திரளொடும்வந்

          துயருமபூ பக்க ரோங்கி

     மட்டவிழ்திண் புயக்குரிசின் முகம்மதுதம்

          முனம்விடுப்ப மகிழ்ந்து நோக்கிக்

     கட்டியபொன் மதிட்ககுபா நகரிடைவெங்

          குபிரர்மனங் கருகி வாட

     விட்டமுடன் சதக்காவென் றிரப்போர்க்கும்

          வறிஞோர்க்கு மீந்திட் டாரால்.

34

      (இ-ள்) அவ்வாறு அவன் கொடுக்கவே ஓங்கா நிற்கும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் பந்தயத்தைப் பொருத்திப் பலிக்கப் பெற்ற அவ் வொட்டகக் கூட்டத்தோடும் வந்து தேனானது அதிகரித்துச் சிந்துகின்ற திண்ணிய தோள்களையுடைய குரிசிலாகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் விடுக்க, அவர்கள் களிப்படைந்து பார்த்துப் பொன்னினாற் கட்டப் பெற்ற மதில்களை யுடைய கஃபத்துல்லாவி னிடத்து பட்டணத்தின் கண்ணுள்ள கொடிய காபிர்களின் இருதய மானது தீய்ந்து மெலிவடையும் வண்ணம் இஷ்டமுடன் சதக்கா வென்று சொல்லி இரக்கப்பட்டவர்களுக்கும் தாரித்திரர்களுக்கும் கொடுத்தார்கள்.

 

2175. அன்பரா முகம்மதுவுக் கரியநபிப்

          பெயர்வானோர்க் கரச னீந்த

     வொன்பதாம் வருடவரை யளவுமுயர்

          ககுபாவி னொருங்கு தூக்கி

     வன்பரா கியகுறைசிக் காபிரிடு

          மொப்புமுறி வசன மியாவு

     மின்புறா நின்றுசித லரித்ததெனப்

          பெரியதந்தைக் கியம்பி னாரால்.

35

      (இ-ள்) அன்பராகிய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அருமையான நபியென்னும் அபிதானத்தைத் தேவ