பக்கம் எண் :

சீறாப்புராணம்

807


முதற்பாகம்
 

ராதிபராகிய ஜபுறயீ லலைகிஸ்ஸலா மவர்கள் கொடுத்த ஒன்பதாவது வருடத்தில் அவர்கள் கொடிய வம்பான குறைஷிக் காபிர்கள் மலையி னளவைப் போலும் உயர்ச்சி தங்கிய கஃபத்துல்லாவில் ஒருங்கு தூக்கியிடா நிற்கும் ஒப்பைக் கொண்ட முறியினது வார்த்தைகளனைத்தையும் சிதல்களானவை இன்பமுற்று நின்று அரித்துப் போட்டதென்று தங்களின் பெரிய தந்தையாகிய அபீத்தாலி பென்பவருக்குக் கூறினார்கள்.

 

2176. அரசரட லரியகும துரைத்தமொழி

          யபித்தாலி பகத்தி னோர்ந்து

     கரிசமிடுங் குலக்காபிர்க் குரைப்பவதி

          லைவர்மனக் கறுப்பு நீக்கி

     விரைவினொடு மொப்புமுறி தனைக்கிழிப்ப

          வரும்போது வெகுண்டு கூறி

     யெரியிடைநெய் யிட்டதெனச் சிலகாபிர்

          தடுப்பமன மியைந்தி லாரே.

36

      (இ-ள்) அரசர்களாகிய யானைகளுக்கு வலிமையைக் கொண்ட சிங்கத்திற்கு நிகரான அஹ்மதென்னும் திருநாமத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளை அபீத்தாலி பென்பவர் தமது சிந்தையின்கண்ணறிந்து கரிசமிடா நிற்குங் குலத்தினது காபிர்களுக்குக் கூற அதில் ஐந்து காபிர்கள் தங்களின் இருதயத்தினது கறுப்பை யொழித்துச் சீக்கிரமாய் அந்த ஒப்புமுறையைக் கிழிக்கும் வண்ணம் வருகின்ற சமயத்தில், சில காபிர்கள் கோபித்துப் பேசி நெருப்பிடத்து நெய்யை இட்டதைப் போன்று தடுக்க அதற்கு அவர்கள் மனம் பொருந்திலர்கள்.

 

2177. சாதிவிலக் கொப்புமுறி பரிகரிக்கும்

          வார்த்தைசெவி தடவக் கேட்டுக்

     காதியெழுந் தபூசகல்கண் சிவந்துமனங்

          கறுத்துமுகங் கடுத்து நோக்கி

     மோதுதலுங் கேளாது ககுபாவிற்

          றூக்கிவைத்த முறியை வாங்கிப்

     பேதமறப் பார்ப்பளவின் முன்னெழுது`

          மெழுத்திலொன்றும் பெற்றி ராதே.

37

      (இ-ள்) அன்றியும், சாதியினது விலக்கைக் கொண்ட அந்த ஒப்பு முறியை நீக்கா நிற்கும் வார்த்தைகளைக் காதுகளில் தடவும்படி கேள்வியுற்றுக் கொலைத் தொழிலை யுடையவனான அபூஜகிலென்பவ னெழும்பி இரு கண்களும் சிவக்கப் பெற்ற மனமானது கறுத்து முகம் கடுத்துப் பார்த்து மோதுதலையும் கேளாமல் கஃபத்துல்லாவிற் றூக்கி வைத்திருந்த அந்த முறியை