பக்கம் எண் :

சீறாப்புராணம்

808


முதற்பாகம்
 

வாங்கிப் பேதமறும் வண்ணம் பார்த்த மாத்திரத்தில் ஆதியில் எழுதிய எழுத்தில் ஓரெழுத்தையேனும் அந்த முறியானது பெற்றிருக்கவில்லை.

 

2178. அல்லலறச் சிறந்தவரி யல்லாவென்

          றொருபெயரி னளவே யன்றி

     யில்லையெழுத் தினியிதனா லிருந்துபல

          னென்னெனவு மெழுது நாளிற்

     பல்லருட னியான்பொருத்த மிலையெனவு

          மெடுத்தோதிப் பலருங் காண

     வொல்லையினிற் கிழித்தெறிந்தான் சாதிவிலக்

          கெனும்பெயர்விட் டோடிற் றன்றே.

38

      (இ-ள்) அன்றியும், துன்பமறும் வண்ணம் சிறப்புத் தங்கிய வரியான “அல்லா” வென்னும் ஒரு நாமத்தி னளவே யல்லாமல் வேறே எழுத்துக்கள் ஒன்றுமில்லை. இனி இதனால் இருந்து பிரயோசனம் என்ன? ஒன்றுமில்லையென்றும் இந்த முறியை எழுதுகின்ற தினத்தில் அநேகரோடு நான் சம்மத மில்லையென்றும், எடுத்துக் கூறிப் பல பேர்களும் பார்க்கும்படி விரைவிற் கிழித்து வீசினான். சாதி விலக்கு என்று கூறும் அபிதான மானது அவ்விடத்தை விட்டு மோடிற்று.

 

2179. இன்னிசைநன் மறைமுகம்ம திருங்கலிமாத்

          தனைவிளக்கி யிருந்தோர்க் கெல்லா

     மன்னமருந் திடநீருப் பங்கியளி

          யாதவரோ டடுத்தி டாமற்

     சொன்னபடி சாதிவிலக் கொப்புமுறி

          யெழுதினமன் சூறு வென்போன்

     றன்னிருகை வழங்காமன் மாறாத

          பிணிபிடித்துத் தாழ்ந்திட் டானால்.

39

      (இ-ள்) அன்றியும், இனிய இராகத்தைக் கொண்ட நல்ல புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நபிகட் பெருமானார் ஹபீபு றப்பில் ஆலமீன் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் பெரிய கலிமாவை விளங்கும் வண்ணஞ் செய்து இருந்தவர்களியாவர்கட்கும் அன்னமுண்ணுதற்குத் தண்ணீர், உப்பு, நெருப்பு ஆகிய இவைகளைக் கொடாது அவர்களோடு நெருங்காமற் கூறியபடி சாதி விலக்கினது ஒப்பு முறியை வரைந்த மன்சூறு வென்பவன் தனது இரண்டு கைகளும் வழங்கப் பெறாமல் நீங்காத நோய் பிடித்துத் தாழ்ந்தான்.