பக்கம் எண் :

சீறாப்புராணம்

809


முதற்பாகம்
 

புத்து பேசிய படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

2180. நி்லத்தரசுக் கிதத்தநடுச் சிரத்தினணி

          யெனச்சிறப்பு நிறைமக் காவிற்

     குலத்தரச ரினிதுவப்பக் கலிமாவெண்

          டிசைமுழுதுங் குலவி யோங்கச்

     சிலைத்தடக்கை வயவேந்த ரினிதுசூழ்ந்

          திருக்குநபி செவ்வி நோக்கி

     மலைத்தடத்திண் புயகுசைனு வெனுமறபி

          மகிழ்வினொடும் வந்துற் றானே.

1

      (இ-ள்) பூமியாகிய அரசனுக்கு இதத்தைக் கொண்ட நடுத்தலையினது மகுடத்தைப் போலும் சிறப்பானது பூரணப்பட்ட திருமக்கமா நகரத்தில் மேன்மை யுடைய இராஜர்கள் இனிமையுடன் விரும்பவும், கலிமாவானது எட்டுத் திக்குகளின் முழுவதிலும் பிரகாசித்து வளரவும், கோதண்டத்தைக் கொண்ட பெரிய கையினது விஜயத்தைப் பெற்ற அரசர்கள் இன்பத்தோடு வளைந்திருக்கும் நபிகட்பெருமான் நாயகம் எம் மறைக்குந் தாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகைப் பார்த்து மலை போலும் விசால மாகிய திண்ணிய தோள்களை யுடைய குசைனுவென்னும் அறபியானவன் களிப்போடும் வந்து சேர்ந்தான்.

 

2181. எதிரடுத்த குசையினுக்கன் பருளினொடுங்

          கரஞ்சாய்த்திட் டிருக்கை யீந்து

     மதியினுமும் மறையினுந்தேர்ந் தவரவர்கள்

          கருத்தறிய வல்லோய் நாளுங்

     கதிதருமென் புறுக்கானின் வழியொழுகா

          திருந்ததென்னுன் கருத்தி னூடும்

     பதிவுபெறக் கலிமாவை யுரையெனநந்

          நபியினது பகர்ந்திட் டாரால்.

2

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து தங்களுக்கு எதிராக நெருங்கிய குசைனு வென்னும் அந்த அறபிக்கு நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் கையைச் சரித்து அன்பினது கிருபையோடும் இருக்கை கொடுத்துப் புத்தியினாலும் முன்னுள்ள தௌறாத்து,