பக்கம் எண் :

சீறாப்புராணம்

810


முதற்பாகம்
 

இஞ்சீல், சபூறென்னும் மூன்று வேதங்களினாலும் தெளிந் துணர்ந்து அவரவர்களின் கருத்துகளை விளங்கும் வண்ணம் வல்லமை யடைந்த குசைனுவே! பிரதி தினமும் மோட்சத்தைத் தரா நிற்கும் எனது புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தில் வழிப்பட்டு நடவா திருந்த காரணம் யாது? உனது கருத்தினிடத்தும் பதிவு பெறும்படி கலிமாவைக் கூறுவாயாகவென்று இனிமையுடன் கூறினார்கள்.

 

2182. மானுரைத்த துடும்புரைத்த தமாவாசை

          யிடத்தினிறை மதிவந் தோடித்

     தானுரைத்த தறியேனோ வுமதுவழிப்

          படுமவர்க டமைக்கா ணேனோ

     யானுரைப்ப திலைக்கலிமா விதயம்பொருந்

          தாப்புகழ்நா வேற்று வேனோ

     தீனுரைத்த கபீபரசன் றடியினையோர்

          வடிவாக்குஞ் செவ்வி யோயே.

3

      (இ-ள்) அவ்விதம் கூறத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைப் புகன்ற ஹபீபரசனது அவயவங்க ளற்ற மாமிசத் தடியைப் பெண் சொரூபமாக்கும் அழகை யுடைய முகம்மதரே! தங்களுடன் மான் கூறியதையும், உடும்பு கூறியதையும், அமாவாசையினிடத்தில் பூரணப்பட்ட சந்திரன் ஓடி வந்து கூறியதையும், யான் உணரேனா? உணருவேன். உங்களது மார்க்கத்தி லுபட்டவர்களைப் பாரேனா? பார்ப்பேன். ஆயினும் உங்கள் கலிமாவைக் கூறுவதில்லை எனது மனமானது இசையாத கீர்த்தியை நாவினாற் றுதிப்பேனா? துதிக்க மாட்டேனென்று சொன்னான்.

 

2183. அனைத்தையுங்கா ரணமலவென் றகத்திருத்தி

          வெறுத்தனையுள் ளருளி னோடு

     மனைத்தலத்தோ ருருத்தனைநீ வணங்கினையவ்

          வுருத்திருந்த மணிவாய் விண்டு

     கனைத்ததிரைக் கடனிலத்திற் பலர்புகழ

          வுரைக்குரைகட் டுரைக்கு மேலியா

     னினைத்தபடி கலிமாவை யுரைப்பையோ

          வெனநபியு நிகழ்த்தி னாரால்.

4

      (இ-ள்) நபிகட் பெருமானார் நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் நீ அவ்வாறு யாவற்றையும் காரணமல்ல வென்று இருதயத்தின் கண்ணிருக்கும்படி செய்து மறுத்தாய். உனது வீட்டினிடத்து மனக்கிருபையோடும் ஒரு