பக்கம் எண் :

சீறாப்புராணம்

811


முதற்பாகம்
 

சொரூபமாகிய புத்துக்கானை வைத்து வணங்குகின்றாய். அந்தச் சொரூபமான புத்துக்கான் செவ்வையாய்த் தனது அழகிய வாயைத் திறந்து சப்திக்கா நிற்கும் அலைகளையுடைய சமுத்திரத்தினது இந்தப் பூமியின்கண் அனேகர் துதிக்கும் வண்ணம் வார்த்தைக்கு வார்த்தை யுறுதியாகப் பேசுமேயானால் நான் சிந்தித்தபடி கலிமாவைக் கூறுவாயா? வென்று கேட்டார்கள்.

 

2184. நந்நபியிந் நெறியுரைப்ப குசையினெனு

          மறபிசிறு நகையி னோடு

     மென்னிடத்தி லாறுபத்தைந் தாண்டுவரை

          யிருந்துமன மினிது கூரச்

     சொன்னதிலை யோர்மொழிமந் திரத்தடங்கித்

          தெய்வமுரை சொல்லு மோநீ

     ருன்னியவா சகத்தினொடு முரைக்குமென

          வுரைப்பதென்கொ லுறுதித் தன்றே.

5

      (இ-ள்) நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்வொழுங்கைக் கூறக் குசையினென்னும் அவ்வறபி யானவன் புன்சிரிப்போடும் அஃது என்னிடத்தில் அறுபத்தைந்து வருடங்கள் வரையிருந்தும் எனது இருதயமானது இன்பமடையும்படி ஒரு வார்த்தையாயினும் பேசின தில்லை. தெய்வமானது மந்திரத்தில் அமைந்து வார்த்தையாடுமா? ஆடாது. நீங்கள் எண்ணிய வாசகத்தோடும் பேசுமென்று பேசுவது என்ன வலிமையை யுடையது.

 

2185. பொன்னணிநன் மணிதூசு நறுமலர்கள்

          பலசொரிந்து புகழ்ந்திட் டேத்து

     மென்னொடுரை யாதகுலத் தெய்வமும

          துரைக்குரைநேர்ந் தியம்பு மேயாற்

     பன்னுமறை வழியொழுகிப் படிதீண்டா

          மலரடியைப் பரவி வாழ்த்தி

     மன்னுமிசு லாமாகிக் குபிரகற்றித்

          தீனிலைமை வளர்ப்ப னென்றான்.

6

      (இ-ள்) அன்றியும், பொன்னினாலான ஆபரணங்களும், நல்ல அழகிய வஸ்திரங்களும், பரிமளத்தைக் கொண்ட புஷ்பங்களும், பல சிந்தித் துதித்து வாழ்த்தும் என்னுடன் பேசாத மேன்மையையுடைய அத்தெய்வ மானது உங்களது வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் நேர்ந்து பேசுமே யானால் நீங்கள் கூறுகின்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது மார்க்கத்தில் வழிப்பட்டு நடந்து பூமியைத் தொடாத உங்களின்