பக்கம் எண் :

சீறாப்புராணம்

813


முதற்பாகம்
 

கொண்டு முழுவதும் மூடித் தெருவின்கண் உலாவி நடந்து வந்து மலைகளைப் போலும் பெரிய வலிமை யமைந்த தோள்களினது வாசனை யானது கமழப் பெற்ற நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் குளிர்ச்சி தங்கிய சந்திரனுக்கு நிகரான முகத்தினது நேராக இருத்தித் தானும் ஒரு பக்கத்திலிருந்தான்.

 

2188. வைத்தபுத்தை முகநோக்கி யுனைவணங்கி

          யிருந்தோன்றன் மனது கூர

     வித்தலத்துள் ளோரறிய வெனதுவர

          வாறுமெனக் கியைந்த பேரு

     மெய்த்தவுரை மறைப்பேரும் விண்ணினுமண்

          ணினுமறிய விளம்பு வாயென்

     றுத்தமசற் குணநயினா ரமுதமலர்

          வாய்திறந்தங் கோதி னாரால்.

9

      (இ-ள்) மேன்மை தங்கிய நல்ல குணத்தை யுடைய நயினாரான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு வைத்த அந்தப் புத்துக்கானின் முகத்தைப் பார்த்து உன்னைப் பணிந்து இருந்தவனான குசையினென்னும் அறபியினது மனமானது கூரவும், இந்தப் பூமியின் கண்ணுள்ளவர்களுணரவும், எனது வரலாற்றையும் எனக்குப் பொருந்திய அபிதானத்தையும், அறியா நிற்கும் வசனங்களை யுடைய எனது வேதத்தினது நாமத்தையும் பூலோகத்தின் கண்ணும் வானலோகத்தின் கண்ணும் தெரியும் வண்ணம் கூறுவாயாக வென்று தங்களின் அமுதத்தைக் கொண்ட தாமரை மலரை நிகர்த்த வாயைத் திறந்து அங்கு கூறினார்கள்.

 

2189. வெண்ணிலவு துளித்தொழுகு மதிவதன

          முகம்மதினை விளித்து நோக்கி

     வண்ணமலர் வாய்திறந்து பெரியோன்றன்

          றிருத்தூதாய் வந்த கோவே

     பண்ணருநன் மறைநபியே வானவர்பொன்

          னடிபரவப் படியின் வந்தோ

     யெண்ணரும்பே ரொளியுமும தொளியில்வரக்

          கதிர்வடிவா யிருந்த வேந்தே.

10

      (இ-ள்) அவ்வாறு கூற அந்தப் புத்துகான் வெள்ளிய நிலவானது சொரிந்து ஒழுகா நிற்கும் சந்திரனை நிகர்த்த முகத்தையுடைய ஹபீபுறப்பில் ஆலமீன் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அழைத்துப் பார்த்து