முதற்பாகம்
அழகிய தாமரை மலரை
நிகர்த்த தனது வாயைத் திறந்து பெரியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய
றசூலாய் வந்த அரசரே! இராகத்தைக் கொண்ட அருமையாகிய நல்ல வேதத்தினது நபியே! தேவர்களான
மலாயிக்கத்துமார்கள் பொன்னைப் போலும் திருவடிகளை வணங்கும் வண்ணம் இந்தப் பூலோகத்தின்கண்
வந்தவரே! நினைத்தற்கரிய பெரிய பிரகாசமும் உமது பிரகாசத்தில் நின்றும் வரும்படி சூரிய வடிவமாய்
இருந்த இராஜரே.
2190.
அல்லாவின் றிருத்தூதர் வேதநபி
முகம்மதென வகத்திற் கொள்ளார்
பொல்லாத நரகடைவ ருமதடியிற்
பணிந்துகலி மாவைப் போற்றிச்
சொல்லார மனத்திருத்த வறிந்தவரே
சிறந்த பெருஞ் சுவனமாள்வா
ரெல்லாரு மெனைப்போல்வா ரறிவரிது
சரதமென வியம்பிற் றன்றே.
11
(இ-ள்) உங்களை
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய றசூலான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது
நபி முகம்மதென்னும் திருநாமத்தையுடையவ ரென்று மனசின்கண் கொள்ளாதவர்கள் பொல்லாத நரக லோகத்திற்
போய்ச் சேர்வார்கள். உங்களது பாதங்களில் தாழ்ந்து கலிமாவைத் துதித்து வாக்கார இருதயத்தின்கண்
இருத்தத் தெரிந்தவர்களே சிறப்பைக் கொண்ட வஸ்துக்களை யுடைய சுவர்க்கலோகத்தை
யாள்வார்கள். என்னைப் போல்வா ராகிய எல்லா ஜனங்களும் அறியுதற்கரிது. இஃது சத்தியமென்று
கூறிற்று.
2191.
புத்துரைத்த மொழிகேட்டு குசைனெனுமவ்
வறபியுடற் புளகத் தோடு
முத்தமணி யொளிமுகம்ம தடிபரவிக்
கலிமாவை முழங்க வோதிப்
பத்திபெறத் தொழுகைமுதற் படித்துத்தீ
னெனுமொழுங்கின் பரிவினோடு
மெத்தலமும் புகழ்ந்தேத்த வீமான்கொண்
டிசுலாமி னிணங்கி னாரே.
12
(இ-ள்) குசையி
னென்னும் அந்த அறபி யானவர் அவ்வாறு அந்தப் புத்துக்கா னானது கூறிய வார்த்தைகளைத் தமது இரு
காதுகளினாலுங் கேள்வியுற்றுச் சரீரப்புளகத்துடன் முத்தினது அழகிய ஒளியாகிய நாயகம் நபி காத்திமுல்
அன்பியா முஹம்மது
|