O சலவை செய்த பளிங்காய் இருந்தும் ... இன்னமும் வெளுக்க - இடம் உண்டென்று கருதியே முகம்மது கண்ணீர் வடிப்பார் ! O மணல் மைதானத்தில் காகிதக் கப்பலைச் செலுத்துவர் - மற்ற இளைஞர்கள் ... முகம்மதுவோ - மனிதன் படைக்கப்பட்டது மாபெரும் பணிக்கு; விளையாடித் திரிந்து வீழ்வதற்கல்ல என்பார்கள் ! O காரணம் ... மற்றவர்களுக்கு மனிதர்கள் வெட்டி எறிந்த நகங்கள் ! முகம்மது நபிக்கோ ... மனிதர்கள் பிறை நிலாக்கள் ! |