பக்கம் எண் :

102 வலம்புரி ஜான்


O

 

படைத்தற்கெல்லாம்

குழந்தை மனிதன்

படியாய் விழுந்தான்.

பாவம் மனிதன் !

 

O

 

சிலையைச் செய்தான் ...

சிலையின் காலில்

இவனே கிடந்தான் !

 

O

 

பணத்தை வடித்தான்...

இவனுக்கே அது

வினையாய் விடிந்தது !

 

O

 

எல்லோருக்கும்

விலை வைத்தான் ...

பிறகு -

மலிவு விலையில்

மனிதன் கிடைத்தான் !

 

O

 

இயந்திரம் கண்டான்.

இறுதியில் இந்நாள்

இயந்திரத்தாலே

மனிதன் இவனே

இடம் பெயர்கின்றான் !