பக்கம் எண் :

104 வலம்புரி ஜான்


உவந்தே களித்தனர்.

முகம்மது இவற்றை

அறவே வெறுத்தார் !

 

O

 

இந்த ஞானம்

முகம்மது நபிக்கு

இயல்பாய் வந்தது !

 

O

 

அறிவு என்பது ...

புறத்தே இருந்து

புகுத்தப்படுவது !

 

O

 

ஞானம் என்பது ...

தன்னில் இருந்து

தானே விளைவது !

 

O

 

அறிவு என்பது

வெளிச்சத்தோடு விரவி நிற்கும் -

ஞானம் என்பது ...

வெளிச்சம் விளைந்த

இருட்டு வயலை

இயல்பாய் நினைக்கும் !

 

O

 

ஆகவேதான்

செய்திகளை மாத்திரமே