பக்கம் எண் :

108 வலம்புரி ஜான்


O

 

காயப்பட்ட எருதின்

கழுத்துப் புண்ணைக்

காகம் கொத்தும் ;

எருதோ

வாலைச் சுழற்றும் ;

கழுத்தை அசைக்கும் ;

எப்படியாவது காகத்தை விரட்ட

எடுக்கும் முயற்சி ...

கழுத்தை அசைக்கையில்

பிறக்கும் மணி ஒலி

கொத்தலாம் மேலும் என்பதற்கான

பச்சைக் கொடிதான்

பகரும் காக்கை ; பாவம் எருது !

 

O

 

சிறகுகள் முளைத்த

சின்ன இருட்டாம்

வீங்கிய புண்ணில்

விழுந்த காக்கையை

விரட்ட இயலாத ...

எருதினைப் போல

வாடுவார் மானிடர் !

 

O

 

அவருக்கெல்லாம்

ஆறுதலாக அமைந்தார்

அருமை முகம்மது !