பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்109


O

 

கம்பவிளக்கு

வெளிச்சக்கோலால்

பூமியைப் பெருக்கக்

குனிவது போல ...

மறையவர் முகம்மது

நடக்கும் போது

பூமியைப் பார்த்தே

கண்களை விதைப்பார் !

 

O

 

வெளிச்சப் புள்ளியாய்

விரைகிற இவரை

உதட்டால் ஊரார்

‘அல் அமீன்’ என்பர்.

‘அல் அமீன்’ என்றால்

நம்பிக்கைக்குரியவர்

என்றே பொருள்படும் !

 

O

 

உண்கிறேன் ; குடிக்கிறேன் ;

சொல்லில் சுளுக்கு

இல்லவே இல்லை ;

சுவாசிக்கிறேன் -

சொல்லல் சரியா ?

 

O

 

நாசிக்கம்பத்தில்

காற்றுக் கொடியை

ஏற்றி இறக்குவது நாமா ?