O அவ்வப்போது கைதாகிற காற்று அவ்வப்போது விடுதலை ஆகிறது ! O இந்த - காற்றைச் சுவாசிப்பதால் மனிதர்கள் வாழ்வதில்லை; நம்பிக்கைகளைச் சுவாசிப்பதால் தான் வாழ்கிறார்கள் ! O நம்பிக்கை - சொர்க்க உலகத்தின் சுனை நீர் ஊற்று ... பிரளயம் பிறந்தபோதெல்லாம் வற்றிவிட்டது நீர் என்று செய்தி வாசித்த வானவில் ! O காற்றில் ஆடும் தீபங்கள் அணைந்துவிடாமல் ... கைத்தலமாகிக் காப்பாற்றுகிற சதைத் தாமரை ! O நம்பிக்கை இல்லாத இல்லங்களில் ... |