O பட்டாணிக் கடலையைப் பார்த்துப் பார்த்து உலக உருண்டை எங்காவது உடுத்திக் கொள்ளுமா? O நேரம் வந்தால் வேளை வந்தால் முட்டைத் தோட்டைத் தனது குட்டை அலகால் தட்டி எறிந்துவிட்டு பிரபஞ்சம் என்கிற கடலை உருண்டையைக் காலால் உதைக்கிறதே கோழிக்குஞ்சு - O தோட்டுக்குள் - சுட்டிக்காட்டுவதற்கு சுவர்க்கடிகாரம் இல்லை ... சொல்லிக் கொடுக்க ஆசிரியப் பெருமக்கள் அறவே இல்லை ... O முட்டைக்குள்ளும் இறைவனின் நாட்டம் முகாம் இட்டிருக்கும் ! |