பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்115


சிறகு விரித்தார் ...

தந்தையைப் பிரிந்தால்

தவிப்பேன் என்று

புல்லாங்குழலில்

புகுந்த காற்றாய்

பிள்ளை முகம்மது - அவர்

பின்னே நடந்தார் ...

 

O

 

சிரியா நாட்டில்

‘புஸ்ரா’ நகரம்

ஆடிக்காற்றில்

அவிழ மறுக்கும்

கூந்தல் முடிச்சாய்

குவிந்து கிடந்தது ! ...

 

O

 

பஹீரா மடமோ

பணிய மறுக்கிற

ஒற்றை முடியாய்

ஓங்கி நின்றது !

 

O

 

‘பஹீரா’ என்பவர்

பரம பிதாவிற்குப்

பாத்திரமானவர்.

அவ்வப்போது

ஆண்டவன் -

அறிவித்த வேதங்களை

ஆழ்ந்து படித்தவர் !