பக்கம் எண் :

124 வலம்புரி ஜான்


உத்தமர் கண்ட உடன்பாடு

 

 

O

 

அப்படியின்றி

அன்றைய அரேபியாவில்

முந்தானைச் சரிகையே

முறைத்தது ; உறுத்தியது

ஆகவே தலைவர்கள்

அமைத்தனர் சங்கம் !

 

O

தீயவழிகள்

தீய்ந்தே போகட்டும்

அச்சம் விலகட்டும் ;

ஆறுதல் பிறக்கட்டும்.

ஏழையர் வாழ்க்கை

ஏற்றம் பெறட்டும் ;

பதைப்புக்காளாவோர்

பரிகாரம் பெறட்டும் ;

பயணிகள் இனிமேல்

வசதிகள் பெறட்டும்

என்றதோர் உடன்படிக்கை

எழுந்தே மலர்ந்தது !

 

O

 

இதயங்களில்

செதுக்கப்பட்ட - இந்த

இமாலயக் கல்வெட்டிற்கு

அடிப்படைச் சிற்பி

அருமை நாயகம்

அவர்களே ஆவார் !