கஃபாவில் கண்ணியர் ! O ஒழுங்காய் இயங்கும் உடலின் இதயமாய் ... O நங்கூரம் இட்டும் நகர்ந்து திரிகிற பொறிகளின் துறைமுகமான பொலிந்த முகத்தில் சித்தர்கள் சுட்டும் சுழிமுனையாய் ... O உப்பு நீர்ப்பூக்களில் ஒளிச்சேர்க்கை நடத்தும் இமைகளாய் ... O வெளிச்ச மதகுகளின் வீழ்ச்சியான பார்வையாய் ... O கழுவாத கலர்ப்படங்களை கோடிக்கண்களில் புதைத்து வைத்திருக்கும் பாவையாய் ... |