பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்129


O

 

‘அல்அமீன்’ இவரே !

‘அல் அமீன்’ இவரே !

இவரின் முடிவில்

இதயங்கள் சங்கமம் !

 

O

 

அவரின் உதட்டில் ...

அனைவரும் தொங்கினர் !

 

O

 

அழுத்தமானதும்

அகலமானதும்

ஆன துணி ஒன்று

உடனே வேண்டும்

துணியைக் கொணர்ந்தனர் !

 

O

 

‘ஹஜ்ருல் அஸ்வத்தை’

தூக்கிய பெருமான்

துணியில் வைத்தார்.

 

O

 

கூட்டத்திற்கு ஒருவரைக்

குறித்தனர் தலைவராய் -

 

O

 

அவர்கள்

ஆளுக்கொரு கை

துணியைப் பிடித்தனர்...