பக்கம் எண் :

130 வலம்புரி ஜான்


தூக்கி நடந்தனர் ...

புனிதக் கல்லோ

இருப்பிடம் சேர்ந்தது !

 

O

 

இருந்த இடத்தில்

இந்தக் கல்லை

இருத்தும் பொறுப்பை

எனக்குக் கொடுங்கள்

கேட்டார் முகம்மது -

ஒத்தனர் அனைவரும் !

 

O

 

முகம்மது பெரியோன்

மூலமாய் கல்லை

முறையாய் நிறுத்தினர்.

 

O

 

மூள இருந்த மாபெரும் போரை

முளையில் கிள்ளி

முறைமை செய்தார்

முகம்மது பெருமான் !

 

O

 

செய்கிற தொழிலைச்

சிறப்பாய்ச் செய்வோர்

குறைஷிகள் ; எனினும்

வாணிபம் ஒன்றில்தான்

வாஞ்சை வைத்தனர் !

அபுதாலீஃப் அவர்களுக்கும்

அதுவே பிடித்தது !