பக்கம் எண் :

132 வலம்புரி ஜான்


அம்சா பதறினார்

உடனே ஓடினார் !

 

O

 

விழிப்புருவங்களோ

வில்லாய் வளைந்தன ...

மூன்று நாட்களாய்

அதே இடத்தில்

முகம்மது என்கிற

தேயாத நிலவு
தேங்கிக் கிடந்தது !

 

O

 

வாக்கை நிறைவேற்றவில்லையென

வருந்தவே இல்லை நபிகள் பெருமான்.

மண்ணில் புதைந்த

விதையைப் போல ...

மௌனமானார் !

மூன்று நாட்களாய்

காத்துக் கிடந்தேன்

என்று மாத்திரம்

முன்னவர் முகம்மது

சீதளச் சிரிப்பில்

சொற்களைக் குழைத்தார் !

 

O

 

அந்த நாளில்

மக்கா வாசிகள்

தேடிய பணத்தைப்

புதைத்து விட்டு

இடத்தைத் தேடி இளைப்பது இல்லை !