பக்கம் எண் :

134 வலம்புரி ஜான்


தென்றலுக்கு வந்த தினவு !

 

O

 

அந்த நாளில்

மக்கமா நகரில்

குறைஷி வம்சத்தில்

கீர்த்திமிக்க குடும்பம் ஒன்றில்

கதீஜா என்ற முத்து ஒன்று

கருத்தினைக் கவர்ந்தது !

 

O

 

கதீஜா -

கைகால் முளைத்த கனவு !

மண்ணில் தெரிந்த

மதுர நிலவு !

 

O

 

சதையில் வடித்த

சரித்திரக் கவிதையாய் ...

இறைவனை நாடிய

இனிய பறவையாய் ...

கதீஜா இருந்தார் !

 

O

 

தங்க நிலவு அது

தாஹிரா என்றும்

அழைக்கப்பட்டது !