பக்கம் எண் :

136 வலம்புரி ஜான்


O

 

கதீஜா ஆச்சி

வாணிபம் பண்ணி

வருவாய் பெருக்க

தகுந்த ஒருவரைத்

தவித்துத் தேடினார்.

 

O

 

அந்தப் போதினில்

அருமை நாயகம்

குணங்களைக் குறித்தும்

வாணிபம் இயற்றும்

வல்லமை குறித்தும்

செவிகள் எங்கணும்

செய்திகள் விழுந்தன !

 

O

 

இலாபப் பங்கினில்

இரண்டு மடங்கு

அதிகம் தருவதாய்

ஆளை அனுப்பினார் !

 

O

 

முகம்மது மறையவர்

பெரிய தந்தையார்

காதைக் கடித்தார் !

சம்மதம் பெற்றபின்

சிரியா நாட்டிற்குச்

சிறகு விரித்தார் ...