O விற்பனை நடந்தது விளைந்தது பெருமுதல். O ஆனமுதல் அனைத்திற்கும் போன செலவிற்கும் பொங்கிய பொருளுக்கும் கணக்கினை நாயகம் கச்சிதமாய் நீட்டினார் ! O கதீஜா - களிப்புக் கடலைக் குடைந்து கடந்து துறைமுகம் சார்ந்த கப்பலாய் மகிழ்ந்தார் ! O நபிபெருமானுக்கு அப்போது கால் நூற்றாண்டு கண்டது ! O நடுத்தர உயரம், வெள்ளைச் சுண்ணமும் செம்பஞ்சுக் குழம்பும் ... கை குலுக்கிக் கொண்டால் உண்டாகும் நிறம் தான் மேனியின் வண்ணம் ! |