இயல்பாய்ச் சுட்டும் அழகிய மாதிரி அமைப்பும் ... நிரம்பப் பெற்றவர் நபிகள் பெருமான் ! O சீரிய குணங்கள் சிறந்தே நிறைந்த முகம்மது மறையவர் குணங்கள் பற்றி ... ‘மைஸரா’ என்கிற அடிமையின் வழியாய் அறிந்தே மகிழ்ந்தார் கதீஜா பிராட்டியார் ! O சிரியா நாட்டிற்கு நாயகத்தோடு நகர்ந்தவர் இந்த ‘மைஸரா’ என்பவர் ! O பெருந்தவக் கொழுந்தாம் கதீஜா அம்மையின் கொழுத்த பணத்தினைக் கொத்தியே பறந்திட அரபுக் கழுகுகள் அணிவகுத்திருந்தன. |