பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்141


சுற்றிப் படர்ந்திட

ஏற்ற கொம்பு நாயகம் என்றே

ஏந்திழை நவின்றாள்.

 

O

 

பெரியப்பாவிடம் சம்மதம் கேட்டார்

சரியென்றார் அவர் ...

நாயகம் தமது

தலையினை அசைத்தார்.

 

கதீஜாவின் களிப்பு

 

O

 

கதீஜாவின்

மனமாடத்திலிருந்து

ஆயிரம் புறாக்கள்

அன்றே பறந்தன !

ஆனந்த பைரவி

பாடித் திரிந்தன !

 

O

 

கோடைகால

குளிர்மழை அடித்தால்

பூமகள் புரண்டே படுப்பாள் ;

புல்லரிப்போடும் கனவுகளோடும்

புனிதவதியோ

நாட்களை நகர்த்தினார் !

 

O

 

குறித்த நாளில்

திருமணம் நிகழ்ந்தது.