இலக்கணத்தோடு இயைந்த கவிதையாய் இருவரும் அன்று மரபுப் பாத்தியில் மத்தளம் கொட்டினர் ! O சந்தம் இணைந்த சங்கதி போல திருமண வாழ்வு தித்திப்பானது ! O தேடிச்சேர்த்த தேட்டை எல்லாம் கதீஜா அம்மா நாயகத்திடத்தில் நகர்த்தி மகிழ்ந்தார் ! O அள்ளி வழங்கலும், கிள்ளித் தருதலும் நாயகம் பொறுப்பு ! O அவர்தம் கிளைகளை கதீஜா அம்மையார் வேராய் இருந்து தாங்கிச் சிறந்தார் ! |
|
|