பக்கம் எண் :

158 வலம்புரி ஜான்


கருங்கல் சுவரில் துளையிட்டு

கவனமுடன் இடம் பிடித்த

கடையாணிபோல்

நாயகம் நெஞ்சில்

ஸையத் இடம்பிடித்தார்!

 

O

 

விடுவிக்கப்பட்ட

ஜைதுக்கு ...

விலங்கொன்று பூட்டினார்

முகம்மது அவர்கள் !

இது - பூவிலங்கு!

பொன்னில் இழைந்த

புது வகை விலங்கு!

 

O

 

தமது -

அத்தை மகளான

ஜைனப் என்பவரை

ஜையத்திற்கு

நாயகமே முன்னின்று

நறுமணம் முடித்தார்கள்.

 

O

 

அடிமையை விடுவித்தார்

அன்புப் பிள்ளையென்றார்

அத்தை மகளைக் கொடுத்தார்

அவருக்கு நான் சமம் என்றார்

அண்ணலின் உதாரணம்

அற்புத சாதனம் !