பக்கம் எண் :

160 வலம்புரி ஜான்


முகம்மது எதிர் கொண்ட முகாம்!

 

 

O

 

அழகு முகம் ஒன்று

அம்மைத் தழும்புகளால்

அலைக்கழிக்கப்பட்டது போல்

அரேபியாவின்

நெடுக்கிலும், குறுக்கிலும்

சிலைகள் எழுந்தன !

 

O

 

மனிதர்கள் தங்கள்

கண்டுபிடிப்புகளின்

காலடிகளில் கிடந்தனர் !

 

O

 

காஃபாவைச் சுற்றிலும் மட்டும்

முன்னூற்றறுபது சிலைகள்

முழுமையாய் நின்றன!

 

O

 

காஃபாவை

நிருவகித்து வந்தவர்கள்

குறைஷிகள் மாத்திரமே !

 

O

 

இருந்தும் ...

பெருமானார் -

சிற்பிகளின் பிழைகளுக்குச்

சிரம் தாழ்த்தியது இல்லை !