பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்161


O

 

நாணல்களின் மத்தியில்

நாதஸ்வரத்தைப் போல ...

நிமிர்ந்து நின்றார்

அண்ணல் அவர்கள் !

 

O

 

சடங்குகள் எங்காவது

சமயம் ஆகுமா ?

ஆகும் !

 

O

 

உமி எப்போதாவது

நெல் ஆனால் ...

உரல் எப்போதாவது

உணவாய் ஆனால்...

 

O

 

அந்த நாள்

அரேபியர்களின்

அர்த்தமற்ற சடங்குகளை ...

அண்ணலார் அறவே வெறுத்தார்கள்.

 

O

 

ஒப்பனை ஒரு நாளும்

முகம் ஆகாது என்பதிலும் ...

உள் நாக்கு ஒருபோதும்

சுவை அறியாது என்பதிலும் ...

முகம்மது அவர்களுக்கு

முழு நம்பிக்கை இருந்தது !