O படைக்கப்பட்டவைகளை வசிய மை பூசாமலேயே வசப்படுத்தி விடுகிற ஆற்றல் மனிதனுக்கு உண்டு. இருந்தும் ... படைக்கப்பட்டவைகளின் பாத வளையங்களுக்குள்ளே பதுங்கி இருப்பதிலேதான் பரம சுகம் அவனுக்கு ! O ‘படைப்பில்’ மனிதன் சிகரம் அடிக்கடி சலவைக்குப் போட வேண்டிய அவசியத்திற்கு ஆளாவதே இந்த வாக்கியம் தான் ... O படைப்பில் மனிதன் சிகரம் - என்பதற்கான அடையாளங்களை அவ்வப்பொழுது அவன் தொலைத்து விடுகிறான் ... என்றாலும் மனிதனே சிகரம் O மனிதனே ... இதைச் சொல்லுவது தான் மகிழ்ச்சி தருவதாக இல்லை! இறைவனது படைப்பில் இழிந்தது இல்லை! |