பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்163


O

 

படைக்கப்பட்டவைகளைப்

பரமன் என்று

பாவம் மனிதன்

பாவித்து வருவதை

நாயகம் கண்டு

நடுங்கிப் போனார் ;

உள்ளம் கிழிந்தது

உணர்வுகள் கலங்கின.

 

மூக்கு மாத்திரமே முற்போக்கு !

 

O

 

உலகில் பாதி பெண்கள்

பூக்கள் என்பர் ; நதிகள் என்பர் ;

நாநிலம் எல்லாம் பெண்ணே என்பர் ;

ஆணொரு பாதி ; பெண்ணொரு பாதி ;

இனிப்பு வார்த்தைகளால்

காதுகளை நிரப்பிவிட்டால்

நீரிழிவு ஒன்றுதான்

நிரந்தரம் !

 

O

 

வார்த்தைப் பந்தலில்

வாடிடும் கொடிகள் !

இன்றே இது நிலை என்றால்,

அன்றைய நிலையை

அறியவா வேண்டும்?