பக்கம் எண் :

164 வலம்புரி ஜான்


O

 

பலரும் படிக்கும்

புத்தகம் போல ...

பற்பல பெண்கள் ...

 

O

 

இங்கும் கூட

இன்றும் கூட

இந்நிலை உண்டு.

 

O

 

பிறந்தது பெண் எனில்

புதைத்து விடுவர்

எங்கோ சில இடம்

இப்படி உண்டு இந்திய நாட்டில்.

 

O

 

அந்த நாள் அரேபியாவில்

பிறந்தது பெண் எனில்

பிழைப்பது அரிதாம்.

 

O

 

இதயங்களில் ஈரம்

வற்றி விட்டதால்

மண்ணுக்குள்ளே

அதனைத் தேடினர், மாதவச் சிறுமிகள்!

 

O

 

தப்பிப் பிழைத்த தளிர்களோ

தொடக்கத்தில் இடம் பெற்ற

 

null