பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்165


ஒற்றெழுத்தைப் போல

தொலைக்கப்பட்டனர் !

 

O

 

உலகத்தில் ஒரு நாள்

முதலாளிகள்

ஒழிந்து விடுவார்கள் ...

ஆனால் அப்போதும்

இல்லங்களில்

கணவர்கள் இருப்பார்கள் !

 

O

 

உள்ளுக்குள் அழுதார்

உத்தமர் முகம்மது ...

விடியலுக்காக

விழித்தே இருந்தார்!

 

O

 

முளைவிடவில்லை

விதைகள்   என்றால்

மண்ணைத் தோண்டுவர் ;

விதைகளைப் பார்ப்பர் ;

மறுபடி விதைப்பர் ;

எடுப்பதும் பார்ப்பதும்

விதைப்பதுமாக

இருப்பர் மக்கள் !

 

O

 

நுரையீரல்கள்

இருக்க வேண்டிய இடத்தில்