பக்கம் எண் :

166 வலம்புரி ஜான்


இடம் பிடித்திருந்தன ...

நூலாம் படைகள் !

 

O

 

முன்னே சென்ற

ஒட்டக வரிசைகளின்

பாதவடுக்கள் அழிந்தபிறகும்

முகர்ந்து முன்னேறும்

ஒற்றை ஒட்டகம் !

மக்களோ ...

மூடநம்பிக்கைகளில்

மூழ்கிக் கிடந்தனர்.

 

O

 

நம் நாட்டில்

பல்லி விழுந்ததற்கும்

பலன் பார்ப்பார்கள் ...

தோள் மீது விழுந்தால்

ஒரு பலன் ...

கால் மீது விழுந்தால்

மறுபலன் ...

 

O

 

பல்லி நெருப்பில்

விழுந்து விட்டால் ...

பலன் சொன்ன பல்லிக்கு

இப்படி ஒரு முடிவா என்று

இரங்கற்கூட்டம்   நடத்துவார்கள்.