பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்169


நபிகளானார் நாயகம் !

 

O

 

கத்திக் கொண்டே இருந்த

கடலின் உதடு

அன்று

கறுத்துப் போனது.

 

O

 

எட்டிப் பார்க்க எண்ணிய

பவளப் பாறைகள்

கடலின் தொண்டைக்குள்

பரமபதம் விளையாடின.

 

O

 

காலம் தாண்டிய

கர்ப்பத்தைச் சுமக்க இயலாமல்

வானம் நீலத்தில்

வழுக்கி விழுந்தது.

 

O

 

அப்போது தான்

இறுக்க மூடியிருந்த கையை

இறைவன்

மரவள்ளிக் கிழங்கின்

இலைகளைப் போல

மலர்த்திக் காட்டிய

மாதம் பிறந்தது !