பக்கம் எண் :

170 வலம்புரி ஜான்


O

 

ரமழான் மாதம்

அரேபியாவின் தை மாதம்.

வழி பிறந்த மாதம்

வரலாற்றில் அது தானே !

 

O

 

காலத்தின் அடிவயிற்றில்

இதுவரை

காப்பாற்றப்பட்ட

இரகசிய முடிச்சு

அன்றோடு அவிழ்ந்தது.

 

O

 

கடவுள் மனிதனுக்கு

அதுவரை எழுதிய

கடிதத்தில் அன்று தான்

கையொப்பமிட்டான்.

 

O

 

அன்று

ஆகாயப் பேரேட்டில்

பூமி

புதுக் கணக்குப் போட்டது.

 

O

 

ஓட்டுக்குள் தன்னை

உள் வாங்கிக் கொண்ட