பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்17


நாயகம் எங்கள் தாயகம்

கடலுக்குக் கிளிஞ்சலின் கடிதம் !


O

இறைவனே !
ஒட்டகத் திமிலாய்
உயரம் காட்டும்
எனது
வீக்கத்தை
இடித்துப் போடுகிறேன்!
நத்தையைப்போல்
ஓட்டுக்குள்ளே என்னை
ஒடுக்கிக் கொள்கிறேன் !

நாக்கு உரிக்கப்படாத
மைனாவின்
உள் நாக்கைப்போல்
மௌனமாக இருப்பேன்.
வைகறையைப் பாடும்
வானம்பாடியைப் போல
உன்னையே பாடுவேன் !