பக்கம் எண் :

18 வலம்புரி ஜான்


இறைவனே !

தங்கத்தைக் காலாலே

தள்ளிவிட்டு

தவிட்டை உதடுகளில்

உட்காரவைத்துக் கொள்கிற

மாடப்புறாவைப்போல - நீ

என்னை வைத்திருந்தாலும்

 

எனக்குச் சம்மதமே !

புல்பெண்கள்

பனிக்குடங்களைச்

சுமப்பதற்காக

காற்றுச் சும்மாடுகளைக்

கருத்தரிக்கிறவனே ! ,,,

 

O

 

எங்கள் ஆடியில்

முகம்தான் பார்க்கலாம் ...

உன்

அமர ஆடியிலோ

உருவமும் பார்க்கலாம்

ஊடுருவலும் நடத்தலாம் !

 

பாபா பள்ளியின்

துகள் ஒவ்வொன்றிலும்

துயரம்

படுக்கை போட்டிருக்கிறது !

மேற்குத் திக்கைத்தான்

இதயமில் லாதவர்களால்