O ஆகாயம் கிழிந்ததோ அலைகடல் உருண்டதோ பூமிதான் பிளந்ததோ புவனங்கள் சரிந்ததோ அம்மவோ ... அம்மம்மா பேரொலி பிறந்தது. ஒலி பிறந்த நொடிக்குள்ளே ஒளி வெள்ளம் புகுந்தது ! திசைகள் எரிவது போல் திகைப்பங்கே சூழ்ந்தது ! O சில வேளைகளில் சொல்லை விட்டும் பொருள் தள்ளி இருப்பதைப் போல குகைக்குள்ளே சுடர்தான் விரிந்தது. சூடு வெளியில் சும்மா இருந்தது. O அண்ணலின் இமைப் படகுகள் வெளிச்சக் கடலில் முக்குளி போட்டன. O அந்த விழுதுகள் முளைத்த |