பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்173


வெளிச்சம்

சூரியச் சுருக்கெழுத்தின்

சூட்சும விரிவாக்கம்!

 

O

 

தையல் இயந்திரத்தின்

தப்பாத ஊசியைப்போல்

விண்ணுக்கும் மண்ணுக்கும்

வீடு கட்டி ஆடுகின்ற ஒளிப்பறவை!

 

O

 

அண்ணலின் கனவில்

அப்போது வந்தவர்

நனவில் இப்போது

நகர்ந்து வந்துள்ளார்.

 

O

 

மயிர்க் கால்கள் அனைத்திலும்

அச்சக் கொடிகள்

உச்சி வரை ஏறின !

 

O

 

இறுகிப் போன

அண்ணலின்

பல் வரிசைகள்

காற்றைக்கூட

இப்போது கத்திரித்துப் போட்டன.