பக்கம் எண் :

174 வலம்புரி ஜான்


O

 

வானவரின்

உதட்டு நிலத்தில்

வெளிச்சச் செடிக்கு

பதியம் கிடைத்தது.

 

O

 

‘ஓதுவீராக’ என்றது

ஒளிப்புயல் !

சொற்களின் சுயம்வரமண்டபத்தில்

பொருள் மயங்கி விழுந்தது !

‘ஓத நான் அறியமாட்டேன்’

உரை பகர்ந்தார் உத்தமர்.

 

O

 

அந்த உருவம்

அருகில் வந்தது,

இறுக அணைத்தது.

இப்போதுரைத்தது.

‘ஓதுவீராக’.

 

O

 

உலர்ந்த உதடுகளை

முகம்மது

உண்மையால்

ஈரமாக்கினார்.

‘ஓதியவன் நானல்லன்’.