பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்175


O

 

நிழலே விழாமல்

நெருக்கிச் சேர்த்து

அந்த உருவம்

அணைத்து அண்ணலை.

‘ஓதுவீராக’

மீண்டும் ஒருமுறை

மீட்டி நின்றது.

 

O

 

இடைவெளி இன்றி

இருகரம் சேர்த்தால்

வணக்கம் ஆங்கே

வாயில் திறந்திடும்.

இறுக அணைத்தே

இரு முறை சொன்னதால்

அண்ணல் இம்முறை

ஓதுவது எதை என்று

உற்றுக் கேட்டார்.

 

O

 

நேச வெளிச்சம்

நெருங்கி வந்தது.

மூன்றாம் முறை அது

முழுவதும் தழுவிற்று.

 

O

 

மெய்யும் உயிரும்

மேவியதாலே