பக்கம் எண் :

176 வலம்புரி ஜான்


உயிர் மெய் எழுத்தாய்

உயர்ந்தார் அண்ணல்.

பளிங்கு சலவைக்குப் போடப்பட்டது.

பனிக்கட்டிக்கு வெள்ளாடை கட்டப்பட்டது.

 

O

 

வெளிச்சப் பறவையின்

அலகிலிருந்து

வெந்த மணிகள்

விழுந்து முளைத்தன !

 

O

 

‘இறைவனின் திருப்பெயரால்

ஓதுவீராக’!

அனைத்தையும் படைத்தானே

ஆண்டவன் ; அவன் பெயரால்

அருமையாய் ஓதுவீராக !

 

O

 

அவனே

உதிரக்கட்டியிலிருந்து

உருவாக்கினான் மனிதனை.

கொடைகளின் குடியிருப்பான

உம்முடைய

ஆண்டவனின் திருப்பெயரால்

ஓதுவீராக !