பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்177


O

 

அவன் தான்

எழுது கோல் தந்து

எழுதக் கற்பித்தான்.

அவன்தான்

எழுதுவதன் மூலம்

மனிதன்

அறியாதனவற்றை

அறிவித்த

ஆசிரியர்க்காசிரியன்!

அந்த ஆண்டவனின்

திருப் பெயரால்

ஓதுவீராக !

 

O

 

வேரினைத் தொடர்ந்து செல்லும்

நீரினைப் போல அண்ணல்

வானவர் ஓத ஓத

வண்ணமாய் ஓதினார்கள்.

 

O

 

மானிடப் பள்ளியில்

பயிலாதவர்க்கு

மாபெரும் தலைவன்

பாடம் நடத்தினான்.

 

O

 

ஆகாயம்

இறுதியாக நடத்திய