அஞ்சல் வழிக் கல்வி அன்று ஆரம்பம் ஆனது. O விடைகள் இல்லாமல் வினாக்கள் வெடிக்காது. இப்போது கேள்வி - பதில் இரண்டிற்கும் மூச்சு திணறியது. அண்ணலின் விளக்கம் ஆண்டவனிடமிருந்து வந்தது. O முகம்மது அவர்களே! முகம்மது அவர்களே! நீர் ஆண்டவனின் தூதர்! நானோ அவனது அடிமை. ஜிப்ரயில் என்பதென் பெயராகும். வெளிச்சத்தின் விலாசம் விரிவாய்க் கிடைத்தது. O மகிழ்ச்சியில் பறவைகள் மங்களம் பாடின ! O வானத்தில் அவைகள் வடுக்களை விதைத்தன ! |