பக்கம் எண் :

180 வலம்புரி ஜான்


O

 

அணுத்திரள் அனைத்திலும்

அதுவே ஒலித்தது !

 

O

 

நாற்பதாம் வயதினில்

அண்ணல் முகம்மது

நபிகள் ஆயினர் !

நாயகம் ஆயினர் !

 

O

 

கடலின் பெருமையைப்

பாசியா பகர்வது ?

நிலவின் அருமையை

பூச்சியா புகல்வது?

 

O

 

நுரைப் பூவைக் கிள்ளி வந்து

நூதனமாய் மாலை கட்டும்

மழைக்குருவி நானலலோ

மன்னிப்பும் எனக்குண்டோ?

 

நாயகத்தின் நடுக்கம்

 

O

 

குகைப்புறா இப்போது

கூட்டுக்கு வந்தது.

நாயகத்தின்

நரம்புக்கால்வாய்களில்