குருதி - எதிர் திசையில் குதிக்கத் தொடங்கியது ! வியர்வை முத்துக்கள் வெடித்துச் சிதறின ! O உள்வாங்கும் காற்றில் நெருப்பு அறுவடை உச்சமாய் நிகழ்ந்தது ! O ‘போர்த்துக என்னைப் போர்த்துக’ என்றார். திறந்து பேசிட வந்த பெருமான் போர்வைக்குள்ளே பொதியப்பட்டார்! என்ன நடந்தது? ஏந்திழை கேட்டார். அன்னவர் வந்தார் வான் மறை தந்தார் வண்ணச் செய்தியை வரிமாறாமல் வகுத்தே உரைத்தார். O உடைந்து கிடந்த நாயகம் மனதை ஒட்டிச் சேர்த்தார் கதீஜா நாயகி! |